மத்திய அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தெலங்கானா சட்ட மேலவை தேர்தல் வெற்றி பிரதிபலிப்பதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடியின் வளர்ச்சி சார்ந்த நிர்வாகம் மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றியானது தெலங்கானாவை வளர்ச்சியை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைக்க உதவியுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.