சென்னை, மண்ணடியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கதுறையினர் சோதனை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸியை அமலாக்க துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னை, மண்ணடியில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.