அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
பீப்பாய் ஒன்றுக்கு 1.95 டாலர் குறைந்து 66.31 டாலராக விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 2021ல் கச்சா எண்ணெய் இருப்பு அதிகரித்தபோது பீப்பாய் ஒன்று 68.33 டாலராக இருந்ததாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், தற்போது அமெரிக்காவில் கச்சா எண்ணெய் இருப்பு எதிர்பார்த்ததைவிட அதிகரித்ததன் விளைவாக அதன் விலை 2 சதவீதத்திற்கு அதிகமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கனடா, சீனா மற்றும் மெக்சிகோ மீதான வரி விதிப்பும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கான காரணம் என முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர்.