உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மரக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கலெக்டர்கஞ்ச் என்ற பகுதியில் மரக்கிடங்கு ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், மின்கசிவு காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கிடங்கு முழுவதும் தீ மளமளவனெ பரவிய நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.