அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவை சேர்ந்த பிரவீன் என்ற மாணவர், கடந்த 2023ம் ஆண்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். மில்வாக்கி நகரில் உள்ள ஸ்டோரில் அவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
தொடர்ந்து அவரது உடலை இந்தியா எடுத்துவருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் மட்டும் தெலங்கானாவை சேர்ந்த 3 மாணவர்கள் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.