ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு 24 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சமக்கல்வி எங்கள் உரிமை, அதை கொடுப்பது அரசின் கடமை என்ற பிரசாரத்தை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை லட்சத்திற்கு அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை முன்மொழியப்பட்ட மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பொதுமக்கள் பதிவிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.