புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் அமலாக்கத்துறை சோதனையானது நீடிக்கிறது.
2-வது நாளாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் டாஸ்மாக் நிறுவனங்களுக்கு மதுபானங்கள் அனுப்பப்பட்டது தொடர்பாக பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதன் காரணமாக ஆலையில் இருந்து எந்த வாகனத்தையும் வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில் தனியாருக்கு சட்டவிரோத மதுவிற்பனை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.