விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிவகாசியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் தன்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும், நான் குறுநில மன்னர்தான் எனவும் கூறினார்.
“பல கட்சிக்கு சென்று வந்த நீ எல்லாம் என்னை பற்றி பேசலாமா” என மா.ஃபா.பாண்டியராஜனை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி, உன்னை தொலைத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார்.