தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2025, 07:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ராஜாதித்ய சோழன் அணிவகுப்பு மைதானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. இதனை திறந்த வெளி வாகனத்தில் பயணித்தபடி அமித்ஷா பார்வையிட்டார்.

இதையடுத்து “பாதுகாப்பான கடல்வளம், செழிப்பான இந்தியா” என்ற கருப்பொருளுடன் நடத்தப்பட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். நாட்டின் கடல் எல்லை பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லாத சமூகம், கடல் பாதுகாப்பில் மீனவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்தப் பேரணி வரும் 31-ம் தேதியன்று கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் நிறைவடைகிறது.

இந்நிலையில் பேரணியை தொடங்கி வைத்து உரையாற்றிய  அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறினார். 2027-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒவ்வொரு வீரரும் தேசத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்து உள்ளனர் என்றும் கூறினார். ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது எனவும் மத்திய தொழில் பாதுகாப்பு படை தேர்வினை தமிழில் எழுத பிரதமர் மோடிதான் காரணம் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

Tags: ranipet56th anniversary of the Central Industrial Security ForceArakkonam TakkolamSafe Marine ResourcesProsperous Indiacentral governmentprime minister modihome minister amit shah
Share
Tweet
SendShare
Previous Post

மா.ஃபா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

Next Post

தமிழக மக்களை ஏமாற்றும் முதல்வர் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies