டெல்லியில் ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும் 500 மீட்டர் தூரத்தில் மக்கள் மருந்தகம் தொடங்கப்படும் என முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டத்தை, கடந்த ஆம்ஆத்மி அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ரேகா குப்தா, ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும் 500 மீட்டர் தூரத்தில் மக்கள் மருந்தகம் தொடங்கப்படும் என மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.