திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வரும் நிலையில், கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால், கோயில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துதர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.