தமிழ்நாட்டில் தனியாக பெண்கள் நடத்து செல்ல முடியவில்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பாஜக மண்டல் அலுவலகத்தை மத்தியஅமைச்சர் எல் முருகன் கட்சி வைத்து திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகத்திலேயே பெரிய கட்சி அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி பாஜக என தெரிவித்தார்.
இன்று திறந்து வைத்துள்ள கட்சி அலுவலகம் விரைவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாக மாற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவத்தார். 2026ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் எனறும் அவர் கூறினார்.
தமிழ் மொழி மீது அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என்றும், அவர் ஜல்லிக்கட்டு மீண்டும் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளதாக தெரிவித்த அவர், பெண்கள் தனியாக நடத்து செல்ல முடியவில்லை என்றும் கூறினார்.