திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கியது.
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 30 நாட்கள் நடத்தப்படும் பூச்சொரிதல் விழா மேள தாளம் முழங்க சிறப்பாக தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய பூச்சொரிதல் விழா பங்குனி மாத இறுதி வரை நடைபெறுகிறது.
அதன்படி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு இளநீர், மோர், துள்ளுமாவு உள்ளிட்டவை கொண்டு நைவேத்தியம் செய்யப்பட்டது. இதையடுத்து பூக்களை தலையில் சுமந்தவாறு வலம் வந்த பக்தர்கள் கோயிலை வந்தடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டன. பூச்சொரிதல் விழா தொடங்கியதை அடுத்து மாவட்ட காவல்துறை சார்பில் உயர்கோபுரங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.