திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழாவின் 8ஆம் நாள் நிகழ்ச்சியில், சுவாமி சண்முகருக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் மாசி திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், சுவாமி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான பச்சை சாத்தி வெகு விமரிசையாக நடைபெற்றது. பால், பழம், சந்தனம், விபூதி உள்ளிட்ட 36 வகையான பொருட்களை கொண்டு சண்முகருக்கும், வள்ளி – தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.