சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பகேலின் மகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மதுபானக் கொள்கை தொடர்பான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் இந்த சோதனை நடைபெற்றது. இதனால் அவரது வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும், இந்த சோதனையில் முக்கியத்துவம் வாய்ந்த சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.