மும்பையில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர்இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமானம் மீண்டும் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.
19 விமான ஊழியர்கள் உள்பட 322 பேருடன் ஏர் இந்தியா விமானம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டது. சிறிது நேரத்தில் விமானத்தின் கழிப்பறையில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு துண்டு நோட்டீஸ் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக மும்பை விமான நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. விமானம் மும்பைக்கு திரும்பிய நிலையில், அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இருப்பினும் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.