கும்பகோணம் அருகே கஜா புயலின் போது சாய்ந்த தேக்கு மரங்களை வனத்துறையினருக்கு வெட்டி அனுப்பிய ஒப்பந்ததாரர் அதற்கான பணத்தை வழங்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் அருகேயுள்ள தண்டாளம் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் வனத்துறையில் ஒப்பந்ததாரராக பணியாற்றினார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது பட்டுக்கோட்டையில் சாய்ந்து போன தேக்கு மரங்களை வெட்டி வனத்துறையினருக்கு அனுப்பும் பணியினை மேற்கொண்டார். இதற்காக 40 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்தார்.
வட்டியுடன் சேர்த்து 80 லட்சம் ஆன நிலையில் வனத்துறை பணம் தராததால் கடன் தொல்லைக்கு ஆளான குமரவேல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.