சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோவை பரப்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வன்கொடுமை வழக்கில் காவல் ஆய்வாளர் ராஜூ, அதிமுக முன்னாள் நிர்வாகி சுதாகர், முக்கிய குற்றவாளி சதீஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
ஆனால் சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோ வெளியான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
மேலும், சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இழப்பீடுக்கோரி சிறுமியின் தாய் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் அது குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோவை பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி அதனை பரப்பியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.