ஏழை குழந்தைகளுக்கு, அரசுப் பள்ளிகளில் மும்மொழிகள் கற்கும் வாய்ப்பைத் தடுப்பது ஏன் என்ற சாமானியரின் கேள்விக்கு பதில் உள்ளதா என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள பதிவில், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் பல மொழிகள் கற்க திமுக வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் ஏழை குழந்தைகளுக்கு, அரசுப் பள்ளிகளில் மும்மொழிகள் கற்கும் வாய்ப்பைத் தடுப்பது ஏன் என்ற இந்த சாமானியரின் கேள்விக்கு பதில் உள்ளதா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பொதுஜனம் ஒருவரின் வீடியோவை அண்ணாலை பதிவிட்டுள்ளார்.