மதுபான ஊழலில் கோடிக்கணக்கான கருப்பு பணம் திமுக அரசுக்கு சென்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுபான ஊழலில் ரூ.1,000 கோடிக்கு அதிகமான கருப்பு பணம் திமுக அரசுக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார்.
சோதனை நடைபெற்று வருவதாகவும், அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
டெல்லி, சத்தீஸ்கரை விட தமிழக மதுபான ஊழல் அதிகமாக இருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.