வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நாளை தமிழக மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கையில் புதிய அதிபர் வந்தபிறகு கைது நடவடிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக மீனவர்கள் நாளை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், “மீனவர்கள் குறைகள் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எடுத்துரைக்க உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.
வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு நிச்சயம் நல்ல செய்தி வரும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.