மதுரையில் அரசு கட்டட திறப்பு விழா கல்வெட்டில் திமுக நிர்வாகியின் பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருமோகூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது விநியோக கடை மற்றும் குடிநீர் தொட்டியை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
இந்த விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுபதியின் பெயர் இடம்பெற்றிருந்தது.
அரசு விழா கல்வெட்டில் கட்சி நிர்வாகியின் பெயர் இருந்தது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் ரகுபதியின் பெயர் கருப்பு நிற டேப்பால் மறைக்கப்பட்டது.