கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடை விழா சிறப்பாக நடைபெற்றது.
புகழ்பெற்ற மண்டைகாடு பகவதி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கபடும் இக்கோயிலில் மாசித்திருவிழாவை ஒட்டி கடந்த 2-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
இந்நிலையில் மாசிக்கொடை விழாவை ஒட்டி 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண்பானைகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. வாயில் துணியை வைத்து மூடியவாறு உணவு வகைகள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு படைக்கப்பட்டது. ஒடுக்கு விழா என்றழைக்கப்படும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.