பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள பெட்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட தொலைவில் வைக்க அறிவுறுத்தப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை சுத்தம் செய்யும் பணிக்காக 30 வாகனங்களை மேயர் பிரியா கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்ட கழிப்பிடங்களில் சில பகுதிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள பெட்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட தொலைவில் வைக்க அறிவுறுத்தப்படும் எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.