நாமக்கல் அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சரக்கு வாகனத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வாகனத்தில் வந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை தேனிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வாகனத்தில் இருந்த 400 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.