அடுத்த 5 ஆண்டுகளில் மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேர் இந்தியாவில் கல்வி பயில்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.
மொரீஷியஸின் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியாவும் மொரீஷியஸும் இந்தியப் பெருங்கடலால் மட்டுமல்ல, கலாசாரத்திலும் ஒற்றுமையாக உள்ளதாகவும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பயணத்தில் நாம் பங்குதாரர்கள் என்றும் கூறினார்.