தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை திருப்தியாக இல்லை என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் போதுமானதாக இல்லை எனவும் , பயனற்றது என்றும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கரும்புக்கு டன் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாயும், நெல்லுக்கு டன் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 100 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்த்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மேகதாது அணை திட்டத்தை பற்றி வேளாண் பட்ஜெட்டில் பேசாதது வயிற்றில் புளியைக் கரைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.