கிருஷ்ணகிரி அருகே குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சூளகிரி அடுத்த கீழ் மொரசபட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் ஒருநாளைக்கு 2 பேருந்துகள் மட்டுமே வருவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
அத்துடன் முறையான சாலை வசதி, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும் கூறப்படுகிறது. மருத்துவ வசதி பெறுவதற்காக 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளதால் கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கீழ் மொரசபட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.