செங்கல்பட்டில் உள்ள பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு உற்சவத்தின் இறுதி நாளையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தெப்ப உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் குளத்தில் வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.