நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இருசக்கர வாகனங்கள் இடித்து கொண்டதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்பள்ளி கிழக்கு பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பிரதாபராமபுரம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட தகராறில் பாலாஜியை செங்கல்லால் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சரவணன், ஜெயபால் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.