திருப்பூரில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நொய்யல் ஆற்றில் கொட்டி சென்றுள்ளனர்.
தென்னம்பாளையம் தினசரி சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்ட தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விற்பனை செய்யப்படாத தக்காளிகளை விவசாயிகள் ஆற்றில் கொட்டிச் சென்றுள்ளனர்.