காசா மக்களை கிழக்கு ஆப்பிரிக்காவில் குடியமர்த்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தற்காலிக நிறுத்தத்தை எட்டியுள்ள நிலையில், அடிப்படை வசதிகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டுள்ளதால், காசா மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலஸ்தீனியர்களை கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளான, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளில் குடியமர்த்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திட்டம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.