கோவை அரசு மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை காரணமாக, ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவசர சிகிச்சை பிரிவில் ஒரே படுக்கைகளில் 2 நோயாளிகளை படுக்க வைத்துள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கை வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் மேம்படுத்தாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.