மொழி தெரியாததால் துயரம் : கொத்தடிமையாக இருந்தவர் 20ஆண்டுக்கு பிறகு மீட்பு!
Sep 10, 2025, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மொழி தெரியாததால் துயரம் : கொத்தடிமையாக இருந்தவர் 20ஆண்டுக்கு பிறகு மீட்பு!

Web Desk by Web Desk
Mar 17, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொழி தெரியாது என்ற ஒரே காரணத்திற்காகக்   கொத்தடிமையாக வாழ்ந்துவந்த ஒருவர்  20 ஆண்டுகளுக்குப் பின் தன் குடும்பத்தினருடன் இணைந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொத்தடிமையாக இருந்தவரை மீட்டு குடும்பத்தினருடன் இணைத்து வைத்த தொழிலாளர் நலத்துறையின் நடவடிக்கையையும், அதற்குத் தீவிர முயற்சி எடுத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டம் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் கொத்தடிமைகள் மீட்புக்  குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், கடம்பங்குளம் எனும் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆடு மேய்க்கும் நபர் ஒருவர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

நேரடியாக அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆந்திராவைச் சேர்ந்த அப்பாராவ் என்பதும், 20 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்திற்கு வேலை தேடி  வந்த நிலையில் மொழி தெரியாத ஒரே காரணத்தினால் தற்போது வரை கொத்தடிமையாக ஆடு மேய்த்து வருவதும் உறுதியாகினது.

20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பாராவை ஆடுமேய்க்கும் கொத்தடிமையாகப் பயன்படுத்திய நபர்கள் அவருக்கு இதுவரை ஊதியம் வழங்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அப்பாராவை மீட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலத்தில் வசிக்கும் அப்பாராவின் உறவினர்களை கண்டறிந்து அவர்களைச் சிவகங்கைக்கு அழைத்துவர அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மாவட்ட ஆட்சியரால் மேற்கொள்ளப்பட்டது. அப்பாராவின் மனைவி சீதாம்மாள் இறந்துவிட்ட நிலையில், அவரின் மகள் தும்புதோரா சாயம்மாளை சந்தித்த அப்பாராவ் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார்.

இனிமேல் தன் தந்தையைப் பார்க்கவே முடியாது என நினைத்திருந்த தும்புதோராவும், தன் குடும்பத்தைக் காண முடியாமல் தவித்து வந்த அப்பாராவும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட போது சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

தொழிலாளர் துறை சார்பில் கொத்தடிமை மீட்புத் தொகையான 30 ஆயிரம் ரூபாய், ஆட்சியரின் சொந்த நிதி ஒரு லட்சம் ரூபாய் மற்றும் தன்னார்வலர்கள் அளித்த நிதி 2 லட்சம் ரூபாயையும் அப்பாராவின் வங்கிக் கணக்கில் செலுத்திய அதிகாரிகள் அவரை குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: ஆந்திராTragedy due to not knowing the language: Man who was a slave rescued after 20 years!கொத்தடிமையாக இருந்தவர் 20ஆண்டுக்கு பிறகு மீட்பு
ShareTweetSendShare
Previous Post

கிரீன்லாந்தை அபகரிக்க துடிக்கும் அமெரிக்கா : பின்னணி காரணம் என்ன?

Next Post

தெய்வீக ஆற்றல் தவழும் மகா விஷ்ணுவின் மகோன்னத ஆலயங்கள்!

Related News

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies