டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு என மாற்றி மாற்றி பேசி வருதாக, அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,டாஸ்மாக் கடைகளால் இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சில வருடங்களுக்கு முன்பு கனிமொழி தெரிவித்ததையும், தற்போது அமைச்சர் ரகுபதி மாற்றி பேசுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுதொடர்பான வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.அத்துடன், திமுக கேடு தரும் எனவும் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.