ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் வாகனத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
ஜப்பானின் டொயோட்டா நிறுவனம் “மிராய்” எனும் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த காரில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஹைட்ரஜன் தான் நமது எதிர்கால எரிபொருள் எனக் கூறினார்.