டெல்லியில் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்த இருவரை காவல்துறை கைது செய்தனர்.
சாந்தினி சவுக்கில் கடை நடத்தி வரும் ஒரு வியாபாரியிடம் கடந்த 17ஆம் தேதி 80 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட எம்.டி.அலி மற்றும் சமீர் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்தனர்.