பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என நெதர்லாந்து அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் நெதர்லாந்து பிரதிநிதியைச் சந்தித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவது பிராந்திய பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும் எனக்கூறிய அவர், இந்தியாவுடன் நட்பு கொண்ட நெதர்லாந்து பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி செய்வதை நெதர்லாந்து நிறுத்த வேண்டும் எனவும் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.