உக்ரைன், ரஷ்யா போரில் பிரதமர் மோடி மேற்கொண்ட ராஜதந்திர நிலைப்பாட்டைக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டினார்.
டெல்லியில் நடைபெற்ற ரைசினா மாநாட்டின்போது உக்ரைன், ரஷ்யா போரில் பிரதமர் மோடியின் ராஜதந்திர நிலைப்பாடு தொடர்பாக சசி தரூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், போர்க்களத்தில் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என பிரதமர் மோடி கூறியதை மேற்கொள்காட்டி, உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் ஒரே நேரத்தில் நட்பு பாராட்டப் பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் எனப் பாராட்டு தெரிவித்தார்.
இதுபோன்ற ராஜதந்திர நடவடிக்கைகளை வெகுசில நாடுகளால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் சசி தரூர் குறிப்பிட்டார்.