கர்நாடக மாநிலம் கலபுர்கியில் கொலை செய்வது போல ரீல்ஸ் வீடியோ எடுத்த இருவரை காவல்துறை கைது செய்தனர்.
கலபுர்கியில் நடுரோட்டில் ரத்தம் போன்ற திரவத்தைக் கொட்டி கத்தியால் குத்திக் கொலை செய்வது போல இருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.