கர்நாடகாவில் ஆண்களுக்கு வாரத்திற்கு 2 பாட்டில் மதுபானம் விலையில்லாமல் வழங்க வேண்டுமெனச் சட்டப் பேரவையில் மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா விநோத கோரிக்கையை முன்வைத்தார்.
கர்நாடக சட்டப் பேரவையில் பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அண்மையில் தாக்கல் செய்தது. இதில் 36 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருக்கும் கலால் வரி வசூலை 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த நிலையில், சட்டப் பேரவையில் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா, மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை, இலவச பேருந்து பயணம் மற்றும் மின்சாரம் வழங்குவதைப் போல ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மது பாட்டில்களையாவது வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.