கர்நாடக மாநிலம் உடுப்பி மால்பே மீன்பிடி துறைமுகத்தில் மீன் திருடியதாகக் கூறி, ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.