நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வடமாநில தொழிலாளி கொலை சம்பவம் தொடர்பாக உடன் வேலைபார்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மரப்பாலம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த நரேந்திரன், வீரேந்திரன் ஆகிய இருவர் பணியாற்றி வந்தனர்.
கடந்த 18-ம் தேதி நரேந்திரன் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ஒடிசா போலீசார் உதவியுடன் வீரேந்திரனை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.