கோவை மாவட்டம் தாலியூர் பகுதியில் வீட்டின் காம்பவுண்ட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவுப்பொருளைத் தேடிய யானையின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தடாகம், மாங்கரை, தாலியூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், தாலியூர் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களைச் சேதப்படுத்தியது.
அதைத்தொடர்ந்து வீட்டின் காம்பவுண்ட் சுவருக்கு மேல் தும்பிக்கையை நுழைத்து உணவுப் பொருள் உள்ளதா எனத் தேடியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், விவசாயிகள் மற்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.