திட்டங்களுக்கு நிதியை ஒதுக்காமல் இருப்பது, திமுக அரசின் வாடிக்கையாகி விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!
May 9, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திட்டங்களுக்கு நிதியை ஒதுக்காமல் இருப்பது, திமுக அரசின் வாடிக்கையாகி விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 20, 2025, 07:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை, திமுக அரசு வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில்தான் இருக்கின்றன என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று சட்டசபையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 7,500 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டுவதற்கும், தரம் உயர்த்துவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 2,497 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாக சொன்னார்கள். இந்த ஆண்டும், ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளதாக, பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள்.

ஆனால், மானியக் கோரிக்கையில், அன்பழகனார் என்ற பெயரே இல்லை. நபார்டு வங்கியிடமிருந்து, ஊரக அடிப்படை வசதி வளர்ச்சி நிதியின் கீழ் பெறப்பட்ட கடன் உதவி மூலம் பள்ளிக் கூடங்கள் கட்டும் பணிகள் மேற்கொண்டதாக தெரிகிறது.

அதற்கும் சென்ற ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 – 2024 ஆம் ஆண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 560 கோடி ஒதுக்கீடு செய்தார்கள்.

ஆனால், ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யவில்லை என்பது மானியக் கோரிக்கையில் தெளிவாகிறது. ஆனால், நேற்று சட்டப்பேரவையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில், 6,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, அமைச்சர் பெரியசாமி கூறியிருக்கிறார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் செயல்படுவதை நாம் பார்த்தோம்.

விளம்பரத்துக்காக பட்ஜெட்டில் பல கோடி மதிப்பீட்டில் திட்டங்களின் பெயர்களை அறிவிப்பதும், ஆனால், மானியக் கோரிக்கையில் அந்தத் திட்டங்களுக்கு நிதியே ஒதுக்காமல் இருப்பதும், திமுக அரசின் வாடிக்கையாகி விட்டது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன, குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை, திமுக அரசு வெளியிட வேண்டும் என்றும் பெயரளவுக்குத் திட்டங்களை அறிவித்துவிட்டு, நிதி ஒதுக்காமல் நாடகமாடும் போக்கினை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: MK Stalinஅண்ணாமலை குற்றச்சாட்டுNot allocating funds for projects has become a habit of the DMK government: Annamalai alleges!
ShareTweetSendShare
Previous Post

ஆப்பு வைக்கும் ஆன்லைன் “LOAN APP”கள்!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மாநகராட்சி நடவடிக்கை : 30 ஆண்டுகளுக்கு பின் சீரமைக்கப்படும் பந்தல்குடி கால்வாய் பாலம்!

Related News

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆபரணத் தங்கம் – சவரனுக்கு ரூ.920 குறைவு!

சேலம் : கூட்டத்தை கலைப்பது குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள்!

மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

மதுரை விமான நிலையத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு!

பிரதமருக்கு துணை நிற்க வேண்டிய தருணம் : எடப்பாடி பழனிசாமி

Load More

அண்மைச் செய்திகள்

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளன : சிவராஜ் சிங் சவுகான்

தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!

 பஞ்சாப் : வெடிகுண்டை செயலிழக்க வைத்த இந்திய ராணுவம்!

இந்தியா – பாகிஸ்தான் போர் கவலையளிக்கிறது : சீனா கருத்து!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து : தலையிட உலக வங்கி மறுப்பு!

ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு : பிசிசிஐ

விழுப்புரம் : சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட போலி மதுபானங்கள் பறிமுதல்!

புனித போப் லியோவுக்கு பிரதமர் வாழ்த்து!

சூர்யா 45 படத்தின் டைட்டில் விரைவில் ரிலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies