சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாயை பிசிசிஐ பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு, பிசிசிஐ சார்பில் 58 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடி ரூபாயும், துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும் பகிர்ந்து அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.