குஜராத்தின் பர்வாட் சமூகத்தினர் இயற்கை விவசாயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பர்வாட் சமூகத்தினர் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு பங்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அடுத்த 25 ஆண்டுகளில் நாம் வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், அதற்கு பர்வாட் சமூகத்தினரின் ஆதரவு தனக்கு தேவை என்றும் தெரிவித்தார்.
நமது தாய் பூமிக்கு விஷ இரசாயனங்களை ஊற்றியதால் மிகுந்த வேதனையை அளித்துள்ளதாகவும், தற்போது அதை மீண்டும் ஆரோக்கியமாக்குவது நமது பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
மாட்டு சாணம் பூமியை மீட்டெடுக்க உதவும் என்றும்,. இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்டு தாய் பூமிக்கு சேவை செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.