பழனி அருகே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கடந்த 2009-ம் ஆண்டு 200 வீடுகள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன.
இங்குள்ள பல வீடுகளின் மேற்கூரை விரிசலுடன் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செல்வராஜ் என்பவர் வசித்து வரும் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
இதையடுத்து உடனடியாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும், செல்வராஜுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.
எனவே நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் பராமரிப்பு பணிகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.