தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டுக் குழு கூட்டத்திற்கு வருகை தரும் தலைவர்களுக்கு எதிராக பாஜக சார்பில் இன்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை என்றும், படுகொலைகள் நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும்,பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற திமுக அரங்கேற்றும் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு என்றும், குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தார்.
அதன்படி, இன்று கூட்டுக் குழு கூட்டத்திற்கு வருகை தரும் தலைவர்களுக்கு எதிராக பாஜக சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறுகிறது.