தன்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு என்றும், தன்னை நம்பி கெட்டவர்கள் ஒருவரும் இல்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய இபிஎஸ், சாதி, மத வேறுபாடின்றி தமிழனாகவே தான் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றியே தான் அரசியலுக்கு வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, தன்னை நம்பி கெட்டவர்கள் ஒருவரும் இல்லை என தெரிவித்தார்.